திருக்குறள் - குறள் 186
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புறங்கூறாமை.
திருக்குறள் - குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
மு.வரதராசனார் உரை:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
பரிமேலழகர் உரை:
பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். '
மணக்குடவர் உரை:
பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மற்றவனுடைய குற்றங்களைக் கூறுபவன் தன்னுடைய பழிகளுள்ளும் வருத்தும் தன்மையுடையவற்றை ஆராய்ந்து பிறரால் சொல்லப்படுவதனையும் கேட்டறிய வேண்டும்.
Translation:
Who on his neighbors' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.
Explanation:
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்