திருக்குறள் - குறள் 1184

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பசப்புறுபருவரல்.


திருக்குறள் - குறள் 1184


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.

மு.வரதராசனார் உரை:
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

சாலமன் பாப்பையா உரை:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

பரிமேலழகர் உரை:
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அ


மணக்குடவர் உரை:
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அவர் சொன்ன வார்த்தைகளை நான் மனத்தால் நினைத்துக் கொண்டு இருப்பேன். வாயால் பேசுவதும் அவர் சிறப்பினையேயாகும். அப்படியிருக்க இப் பசப்பு வந்தது வஞ்சனையாக அல்லவோ இருக்கின்றது.

Translation:
I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

Explanation:
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்