திருக்குறள் - குறள் 1130

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்.


திருக்குறள் - குறள் 1130


உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.

மு.வரதராசனார் உரை:
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றத


மணக்குடவர் உரை:
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் எக்காதலத்திலும் என் உள்ளத்துள்ளே மனமகிழ்ந்து தங்கியிருக்கின்றார். அதனை அறியாமல் அவர் பிரிந்திருக்கின்றார் - அன்பில்லாதவர் - என்று இவ்வூர் சொல்லும்.

Translation:
Rejoicing in my very soul he ever lies;
'Her love estranged is gone far off!' the village cries.

Explanation:
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்