திருக்குறள் - குறள் 1129

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்.


திருக்குறள் - குறள் 1129


இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.

மு.வரதராசனார் உரை:
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

பரிமேலழகர் உரை:
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு


மணக்குடவர் உரை:
கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனது கண்கள் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற என் காதலர் மரத்தலையறிந்து இமைக்காமல் இருப்பேன். இமையாதிருப்பதைக் கண்டா இவ்வூர் மக்கள் அவரைத் தூங்காத னாய் செய்தார் என்று கூறுகிறார்கள்.

Translation:
I fear his form to hide, nor close my eyes:
'Her love estranged is gone!' the village cries.

Explanation:
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்