திருக்குறள் - குறள் 110

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.


திருக்குறள் - குறள் 110


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

மு.வரதராசனார் உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

பரிமேலழகர் உரை:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர


மணக்குடவர் உரை:
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கடமையாகச் செய்ய வேண்டுவனவாகிய அவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.

Translation:
Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.

Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்