திருக்குறள் - குறள் 1099

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: களவியல். அதிகாரம்: குறிப்பறிதல்.


திருக்குறள் - குறள் 1099


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

மு.வரதராசனார் உரை:
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

பரிமேலழகர் உரை:
(தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன. (பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்குதல் தொழில்


மணக்குடவர் உரை:
அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். இது குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னறியாதவர்போல ஒருவரையொருவர் பொது நோக்கினால் பார்த்துக் கொள்ளுதல் காதல் உடையாரிடத்தில் இருப்பதாகும்.

Translation:
The look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers' eyes.

Explanation:
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்