திருக்குறள் - குறள் 1058

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: இரவு.


திருக்குறள் - குறள் 1058


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

மு.வரதராசனார் உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

பரிமேலழகர் உரை:
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும். (ஐகாரம், அசைநிலை. ஞாலம் என்னும் ஆகு


மணக்குடவர் உரை:
குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வறுமையுற்று இரப்பார் இல்லையானால் குளிர்ந்த இடத்தினையுடைய பெரிய ஞாலத்துள்ளார்களின் வாழ்க்கை, உயிரியில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றினால் சென்று வந்தது போன்றதாகும்.

Translation:
If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.

Explanation:
If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்