திருக்குறள் - குறள் 1057

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: இரவு.


திருக்குறள் - குறள் 1057


இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

மு.வரதராசனார் உரை:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

பரிமேலழகர் உரை:
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் - தம்மை அவமதித்து இழிவு சொல்லாது பொருள் கொடுப்பாரைக் கண்டால்; உள்ளம் மகிழ்ந்து உள்ளுள் உவப்பது உடைத்து - அவ்விரப்பாரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுள்ளே உவக்கும் தன்மையுடைத்து. (இகழ்ந்து எள்ளாது எனவே, நன்கு மதித்தலும் இனியவை கூறலு


மணக்குடவர் உரை:
இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மை அவமதித்துப் பேசாமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்பவராது  உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உனக்கும் தன்மை உடையதாகும்.

Translation:
If men are found who give and no harsh words of scorn employ,
The minds of askers, through and through, will thrill with joy.

Explanation:
Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்