திருக்குறள் - குறள் 1056

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: இரவு.


திருக்குறள் - குறள் 1056


கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

மு.வரதராசனார் உரை:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

பரிமேலழகர் உரை:
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது


மணக்குடவர் உரை:
கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உள்ளது மறைத்தலாகிய னாய் இல்லாதவர்களைக் கண்டால் மானம் விடாமல் இரப்பார்க்கு வறுமையால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

Translation:
It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.

Explanation:
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்