டிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி

65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,

டிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி

இந்திய சந்தையில் சியோமி,சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனம் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் மலிவு விலையில் அதிகமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில்

விற்பனை செய்துவருகிறது, இந்நிலையில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சிறந்த தரம் வாய்ந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது டிசிஎல் நிறுவனம்.

65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் இப்போது அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சினிமா திரையரங்குகளில் அனுபிவிக்கும் அதே ஆடியோ வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

திரை அம்சம்:

65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஐபிஎஸ் எல்சிடி பேனலை ஆதரிக்கிறது. பின்பு எச்டிஆர் 800 தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் தெளிவான வண்ணங்களை திரைக்கு கொண்டுவருகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு இந்த சாதனத்தில் dimming-அம்சம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையா இருக்கும் என்றே கூறவேண்டும். அதன்படி dimming-பொறுத்தவரை துல்லியமாக பிக்சல் அம்சத்தை கொண்டுவருகிறது, குறிப்பாக படம் தரத்தை மேம்படுத்தும் வகையில் இவை சேர்க்கப்பட்டள்ளது. Bluerays மற்றும் Netflix ஆகியவற்றில் அதிகமான திரைப்படங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்இடிமிங் ஒட்டுமொத்த அளவிலான பட தரத்தை மேம்படுத்தும். டிசிஎல் தனியுரிம மென்பொருள் கொண்டு இந்த டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது, எம்இஎம்சி 120ஹெர்ட்ஸ் டிசிஎல் மென்பொருள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் 120fps உள்ளடக்கத்தை கொண்டு வருவதால் காட்சிகளை மிகத்துல்லியமாக பார்க்க முடியும். பின்பு கணினியுடன் எக்ஸ்4 சாதனத்தை இணைத்து பயன்படுத்தினால் சிறந்த கேமிங் அனுபவம் பெற முடியும்.
ஆடியோ அம்சம்:

டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 6-ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு இதன் மூலம் ஒரு இணையற்ற சினிமா அனுபவத்தை வழங்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக whopping 40வாட் ஒலி வெளியீடு வழங்குகிறது டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி,மற்ற டிவி மாடல்களில் இல்லாத Harmon/Kardon என்ற தனிச் சிறப்பான ஸ்பீக்கர்கள் இவற்றில் பயன்படுத்தப்பட்டடுள்ளது. டால்பி டிஜிட்டல் மற்றும் டி.டி.எஸ் பிரீமியம் ஆகியவற்றை இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆதரிக்கிறது. குறிப்பாக அனைத்து இடங்களிலும் டால்பி டிஜிட்டல் அம்சம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, அதே ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு டிவி:

டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை கூகுள் சான்றிதழ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கும் மற்றும் இயக்குவதற்கும் மிக அருமையாக இருக்கும். மேலும் 4கே மற்றும் எச்டிஆர் தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரீமியம், போன்ற பல சேவைகளை ஆதரிக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் பிளே ஸ்டோர் இருக்கும் பல செயலிகளை பயன்படுத்தமுடியும். பின்பு 64-பிட் குவாட்-கோர் சிப்செட் மற்றும் 2.5ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது டிசிஎல் எக்ஸ்4 க்யுஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே கேமிங் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

பெசல்-லெஸ்

குறிப்பாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு சாதனங்களை இந்த டிவியில் இணைந்து பயன்படுத்த முடியும், பின்பு பெசல்-லெஸ் 7.9 மிமீ தடிமன் கொண்டுள்ளதால் காட்சிகளை மிக அருமையாக வழங்கும். பின்பு இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம். அதே சமயம் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்காசமான டிவி.

விலை மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்தில் யுஎஸ்பி-போர்ட், எச்டிஎம்ஐ-போர்ட், கீபோர்ட், மவுஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை பயன்படுத்த முடியும். பின்பு வைஃபை, ப்ளூடூத், போன்ற பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தில் எல்லாமே மிகவும் அருமையாக தான் இருக்கிறது, ஆனால் விலை தான் ஜாஸ்தி, அதன்படி ரூ1,09,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.