ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 4 படங்கள்.

Nov 10, 2021 - 08:26
 0  39
ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 4 படங்கள்.

ஸ்ரீதேவி ஆறு வயது முதலே சினிமாவில் நடித்து. ரஜினியும், ஸ்ரீதேவியும் 22 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார்கள். பல மொழிகளில் ஸ்ரீதேவி நடித்து இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71 வயதிலும் ரசிகர்களுக்காக நடித்து வருகிறார். தற்போது வெளிவந்த  அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக கிட்டத்தட்ட 120 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று முடிச்சு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூன்று முடிச்சு. தெலுங்கில் வெளியான ஓ சீத கதா திரைப்படத்தை படத்தை ரீமேக் செய்து மூன்று முடிச்சு திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த்,ஸ்ரீதேவி நடித்திருந்தனர்.

பிரியா: 1978இல் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் பிரியா திரைப்படம் வெளியானது. இப்படம் சுஜாதாவின் புதினத்தை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் கணேஷ் மற்றும் பிரியா கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜானி. இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருப்பார். ஸ்ரீதேவி இப்படத்தில் பிரபல பாடகியாக நடித்திருப்பார்.

போக்கிரி ராஜா : 1982இல் போக்கிரி ராஜா திரைப்படம் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, ராதிகா நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ், ராஜா என்ற இரு வேடத்தில் ரஜினி நடித்திருப்பார். ரமேஷின் மனைவியாக ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்து இருப்பார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow