பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே
ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
குழு : ………………………..
ஆண் : காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான்
ஆ…..ஆ…காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
ஆண் : பொன் வீணையே
புதுப்பாடகன் தொடும் நேரமோ…..ஓ…..ஓ
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட
ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஆண் : மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆ…ஆ…மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆண் : இதழ் ஓசைகள்
புது ஆசைகள் பரிபாஷைகள் ஆ…..ஆ….
பூ முகமோ பால் நிலவோ
பார்த்ததும் பூத்திடும் யாத்திரை இரவினில்
ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் இங்கே
ஆண் : யாரிது தேவதை ஓராயிரம் பூமழை….