பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : பழகி வந்த புதிய சுகம்
பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ
இதயத்தில் நீ……ஈ…….
பெண் : உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
பெண் : உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
பெண் : இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி நடந்தால்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
துன்பம் என்றொரு ஊர் போகும்
பெண் : உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
பெண் : பருவம் என்றொரு கை அணைத்தால்
பாசம் என்றொரு கை தடுக்கும்
பருவம் என்றொரு கை அணைத்தால்
பாசம் என்றொரு கை தடுக்கும்
பழகு என்றொரு மனம் சொன்னால்
விலகு என்றொரு முகம் சொல்லும்
பெண் : உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்