பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் குழு : ம்ம்ம்…
பெண் : தாலாட்ட குழு : ம்ம்ம்…
பெண் : பொன்மேனி குழு : ம்ம்ம்…
பெண் : நீராட குழு : ம்ம்ம்…
பெண் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
குழு : இளம் காற்றில் பெண் : அச்சச்சா
குழு : தாலாட்ட பெண் : ஆஆ…
குழு : பொன்மேனி பெண் : ஹா ஹா
குழு : நீராட
பெண் : செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே…
குழு : ஆஹான் ஹான்
பெண் : செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே…
பெண் : சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூவண்ணம்
பந்தாட்டம் ஆடட்டுமே
குழு : ஆஆஹாஆ
பெண் : நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
நீரோடு ஓடட்டுமே ஏஏஏஏ..யேஹே…ஏஏஏஏ
பெண் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் குழு : ம்ம்ம்…
பெண் : தாலாட்ட குழு : ம்ம்ம்…
பெண் : பொன்மேனி குழு : ம்ம்ம்…
பெண் : நீராட குழு : ம்ம்ம்…
ஆண் : லலலலலலலல
குழு : ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் : லலலலலலலல
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ
குழு : ஹான் ஹான்
ஆண் : எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ
எட்டாத கொம்பல்ல ஓட்டாத உறவல்ல
எண்ணங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ
குழு : ஹா ஹா
ஆண் : கோபாலன் நானுண்டு கோபியர்கள் தானுண்டு
லீலைகள் ஆகட்டுமே ஏஏஏஏ
ஆண் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
பெண் : ஹாஹான்
ஆண் மற்றும் குழு : இளம் காற்றில் பெண் : அச்சச்சா
ஆண் மற்றும் குழு : தாலாட்ட பெண் : ஆஆ…
ஆண் மற்றும் குழு : பொன்மேனி பெண் : ஹான் ஹான் ஹா
ஆண் மற்றும் குழு : நீராட
பெண் : பெண் பார்க்க பெண் வந்தால்
மண் பார்க்க கண் உண்டு பேசாமல் பேசட்டுமே
குழு : ஹான் ஹான்
ஆண் : தூது ஒன்றும் இல்லாமல் ஏதொன்றும் சொல்லாமல்
உள்ளங்கள் போகட்டுமே
குழு : ஹான் ஹான்
பெண் : நேராக நீயுண்டு
ஆண் : நெஞ்சத்தில் நானுண்டு
இருவர் : லாபங்கள் காணட்டுமே ஏஏஏஏ
இருவர் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் குழு : ம்ம்ம்…
இருவர் : தாலாட்ட குழு : ம்ம்ம்…
இருவர் : பொன்மேனி குழு : ம்ம்ம்…
இருவர் : நீராட குழு : ம்ம்ம்…