பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்
கூரைக்கு மேல கோழி புடிப்போம்
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்
குழு : ஆமா
ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்
குழு : ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்
ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்
ஆள மாத்தி ஆடமாட்டோம்
வேலை இன்றி கூடமாட்டோம்
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்
குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்
ஆண் : குத்தம் இருந்தா
குழு : சொல்லாம செல்லமாட்டோம்
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்
குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி
ஆண் : நல்ல கருத்த
குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்
ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்
நாட்ட மாத்தி காட்டப் போறோம்
சொன்னா செஞ்சு முடிப்போம்
ஓண்ணா சிந்து படிப்போம்
வெளக்கு வெச்சா
குழு : ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்
ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி
மேலே போனார் பாவலரு
ஆடி ஓடி வேலை செய்ய
அவரப் போல யாரு வேறு
குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு
ஆண் : தம்பிகளுக்கு
குழு : பொன்னான சந்தப் பாட்டு
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்
குழு : கண்ணாக உள்ள போது
ஆண் : கஷ்டங்கள் இல்லே
குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு
ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு
உள்ள போது ஏது தாழ்வு
சொன்னா சங்கடம் இல்ல
எல்லாம் நம்மிடம் இல்ல
வெளக்கு வெச்சா….ஹோய்
குழு : ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்
கூரைக்கு மேல கோழி புடிப்போம்
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்
குழு : ஆமா
ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்
குழு : ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்