பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : கல்லற கோபன்
ஆண் : வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
ஆண் : பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ
ஆண் : மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
நிழல்களும் வேகுதே தீயோடு
அகதியாய் இதயங்கள் அலையும் நிலை கண்டு
சிதறுது கண்ணீர் மூச்சோடு
குழு : …………………………..
ஆண் : மலராக ஒரு காலம் சருகாக ஒரு காலம்
இடையினில் இது என்ன பஞ்சமாய் ஓர் யுகம்
குழந்தைகள் விளையாட பொழியட்டும் தாய் மேகம்
புது வண்ணப் பூக்களால் குளிரட்டும் பூ வனம்
குளிரட்டும் பூ வனம்
ஆண் : வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
ஆண் : பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ