பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
ஆண் : வேணுமின்னா வாங்கித் தாரேன்
பொடவ கட்டுங்கடா
வேணுமின்னா வாங்கித் தாரேன்
பொடவ கட்டுங்கடா டேய்…..
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
ஆண் : ஆ…..அக்கம் பக்கம் யாருமில்ல
வெக்கம் இப்ப தேவையில்ல
கண்டாங்கி சேலக் கட்டி அய்யோ அய்யோ
சித்தாட தேடி வந்தாளே…..
ஆண் : தத்தித் தகஜுனு தா தத்தித் தகஜுனு தா
தளாங்கு தரிகிட தாம்
ஆண் : நாளும் ஒழைச்சவன் காடு வெதச்சவன்
ஊருக்கு எளச்சவன் ஆனான்டா
ஏழ ஒழப்புல வாழ நெனச்சவன்
ஏறி மிதிச்சிட்டு போறான்டா
ஆண் : நாளும் ஒழைச்சவன் காடு வெதச்சவன்
ஊருக்கு எளச்சவன் ஆனான்டா
ஏழ ஒழப்புல வாழ நெனச்சவன்
ஏறி மிதிச்சிட்டு போறான்டா
ஆண் : கொட்டடா மத்தாளம்
எழுந்தது பட்டாளம்
கொட்டடா மத்தாளம்
எழுந்தது பட்டாளம்
குட்ட குட்ட குனிஞ்சவங்க
நிமிர்ந்து நில்லுங்கடா…..டேய்…..
குட்ட குட்ட குனிஞ்சவங்க
நிமிர்ந்து நில்லுங்கடா…..
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
ஆண் : நஞ்சை இருக்குது புஞ்சை இருக்குது
சக்தி கெடைக்கல அண்ணாத்த
நாளை இருக்குது வேளை பொறக்குது
தோள நிமிர்ந்துங்க முன்னால
ஆண் : நஞ்சை இருக்குது புஞ்சை இருக்குது
சக்தி கெடைக்கல அண்ணாத்த
நாளை இருக்குது வேளை பொறக்குது
தோள நிமிர்ந்துங்க முன்னால
ஆண் : என்னடா ராமைய்யா
இதக் கொஞ்சம் கேளய்யா
என்னடா ராமைய்யா
இதக் கொஞ்சம் கேளய்யா
பூனையா கெடந்தவங்க
புலிய போல மாறணும்
பூமியில இருப்பதெல்லாம்
பொதுவுடமை ஆகணும்
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
ஆண் : ஆ……ஐயா சாமி வயத்தப் பாரு
தாளம் போடறேன் காசப் போடு
தள்ளிப் போகாதே சாமி….காசக் கொஞ்சம்
தந்துட்டு வூட்டுக்கு போயேன்…
ஆண் : தத்தித் தரிகிட தாம் தத்தித் தரிகிட தாம்
தளாங்கு தரிகிட தாம்
ஆண் : கஞ்சி கொதிக்கல கும்பி கொதிக்குது
நெஞ்சு பொறுக்கல அண்ணாச்சி
கட்ட இடுப்புல கட்ட துணியில்ல
வந்த சுதந்திரம் என்னாச்சு
ஆண் : கஞ்சி கொதிக்கல கும்பி கொதிக்குது
நெஞ்சு பொறுக்கல அண்ணாச்சி
கட்ட இடுப்புல கட்ட துணியில்ல
வந்த சுதந்திரம் என்னாச்சு
ஆண் : வாழ்க்கையே போராட்டம்
இதிலென்ன தேரோட்டம்
ஏழைங்களை சிரிக்க வைப்போம்
எழுந்து நில்லுங்கடா…..
ஹேய் ஏழைங்களை சிரிக்க வைப்போம்
எழுந்து நில்லுங்கடா…..
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்
வாழ்த்து சொல்லி போங்கடா….
ஆண் : வேணுமின்னா வாங்கித் தாரேன்
பொடவ கட்டுங்கடா டேய்…..
வேணுமின்னா வாங்கித் தாரேன்
பொடவ கட்டுங்கடா
ஆண் : வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா
வாங்கடா வாங்கடா
வரவனெல்லாம் வாங்கடா….