வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஓ
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
அந்தி நேரம் வந்தபோது தன்னந்தனிமையில்
பாடும் ஒரு குயில் நான்
வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன
காதலன் அவன் தீட்டிய
கடிதமோ இது மேகமோ
வானமும் எனதாகுமோ
மனதிலே அலை ஓயுமோ
மனதெல்லாம் துடிக்குமே
உனக்கது கேட்குமோ
கேட்குமே கேட்குமே
காதலின் கீதமே
இதய நதிகள் சேரும்
அழுத கடலின் ஓரம்
காதல் மழை தனில்
தேகம் நனைந்தேன்
வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
அந்தி நேரம் வந்தபோது தன்னந்தனிமையில்
வாடும் தனி மயில் நான்
வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன
தோப்பிலே குயில் கூவினால்
துரையென எழுந்தோடினேன்
காற்றிலே மரம் ஆடினால் கனிந்த
உன் முகம் தேடினேன்
நதியிலே நடந்து நான்
இசையிலே மூழ்கினேன்
ஞாபகம் வந்ததே
வேதனை தந்ததே
இடங்கள் இருக்கு அங்கே
இருண்ட கிளியும் எங்கே
ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ
வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஓ
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
அந்தி நேரம்
வந்தபோது
தன்னந்தனிமையில்
பாடும் ஒரு குயில் நான்
வாழைமரம் கட்டி வாழ நினைத்ததென்ன
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன