பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே ஓ
ஆண் : ஓடம் நதியினிலே…
ஒருத்தி மட்டும்
கரையினிலே….
ஆண் : { உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே } (2)
ஆண் : ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
ஆண் : ஆசை என்னும்
மேடையிலே… ஆ
ஆடி வரும் வாழ்வினிலே….
ஆசை என்னும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
ஆண் : ஓடம் நதியினிலே…
ஒருத்தி மட்டும்
கரையினிலே….
ஆண் : கூட்டுக்குள்ளே
குயிலிருக்கும்.. ஓ..ஆ
பாட்டு வரும் வெளியினிலே…
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்தபின்னே
குயில் இருந்தும் பயனில்லே
ஆண் : ஓடம் நதியினிலே…
ஒருத்தி மட்டும் கரையினிலே….
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே ஓ