பாடகர்கள் : விஜய் பிரகாஷ், நபியேர் நவீன்
இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்
ஆண் : உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்
ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
ஆண் : வெள்ளை காகிதம்
ஆகிறேன் தூயவரி எழுதும்
மரணமே பழிகள் மீறியே
சிறிதாய் மீள்கிறேன் அணையும்
வேளையில் ஒளியாய் நீள்கிறேன்
ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்
ஆண் : அந்த காலனின்
வாசனை நான் நுகரும்
கவிதை நிமிடமே ஓர்
தூயனாய் என் சாவை
ஆள்கிறேன்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்
ஆண் : மெதுவாய் ஓய்கிறேன்
புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்