பாடகி : கல்யாணி நாயர்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : ஒன்……கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்……கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே….ஏ……வெலகாமலே…..ஏ…..
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
பெண் : ஒன்…….கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
குழு : ………………………………
பெண் : அவரக் கொடியா ஒன விடாம
படர நெனப்பேன் மலக் காட்டுல
கவல துளியும் தொட விடாம
உனையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு துவச்சாலும்
ஒன்ன சேர பொழச்சு கெடப்பேனே
ஒன் கையில கை ரேகையா
ஒளிஞ்சு இருப்பேனே உலக மறப்பேனே
பெண் : ஒன் கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன் கூட………..
பெண் : பொழுது விடியும் வர நிலாவாய்
மெதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவாய்
ஒதுங்க மறப்பேன் கதை கேட்டிட
வானம் பூரா சலிச்சு எடுத்தாலும்
யாரும் இல்ல ஒனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ
ஒதுங்க நினைக்காத உசுர ஒடிக்காத
பெண் : ஒன்……..கூட தொணையாக
நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
ஒன்…….கூட ஒதுங்காம
கால் நட போடுமே
ஒன சேரவே படி தாண்டுமே
ஒன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே….ஏ……வெலகாமலே…..ஏ…..
உன்னோடு வாழ சேரும் எல்லாமே
பெண் : ஒன்…….கூட