பாடகர் : செல்லமுத்து
இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்……
உனக்கு கும்பம் விலக்கியல்லோ
கும்பம் விலக்கியல்லோ
குரு பூச நான் முடிச்சேன்
குரு பூச நான் முடிச்சேன்……
ஆண் : சாமி
ஆண் : உனக்கு கெரகம் விலக்கியல்லோ
கெரகம் விலக்கியல்லோ
கடைசி பூச நான் முடிச்சேன்…
ஆண் : சாமி…
ஆண் : இங்க குலந்த புலம்புதய்யா
குலந்த புலம்புதய்யா
குவளையத்தில் வந்திறங்கி
குவளையத்தில் வந்திறங்கி
ஆண் : சாமி
ஆண் : இங்கு ஏழை புலம்புதய்யா
ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு
எஞ்சாமி வந்திறங்கு…
ஆண் : சாமி….
ஆண் : நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு
வெகுதூரம் வந்திறங்கு
வெகுதூரம் வந்திறங்கு..
ஆண் : சாமி
ஆண் : நீ சென்னிமலைய விட்டு
சீவன்மல எல்ல விட்டு
சீக்கிரமா வந்திறங்கு…..
ஆண் : சாமி…
ஆண் : பேய் நான் ஓடியும் பாத்தேன்டா
உக்காந்தும் பாத்தேன்டா
நின்னுக்கிட்டும் பாத்தேன்டா…..
ஆண் : சாமி..
ஆண் : அங்கே நாலு கட்டு வீடுமப்பா
நட வச்ச சந்துமப்பா
கீழமேலு வீதியப்பா
செம்மனாரு சந்துமப்பா….
ஆண் : சாமி
ஆண் : அங்கே நாலு கால் சீவனப்பா
நடக்கும் பொருளுமப்பா
பாதாள ஜோடி கண்ணு
பாத்திட்டிருந்து சொன்னேன்…..
ஆண் : சாமி
ஆண் : அடேய்…..உண்டுன்னா உண்டுன்னேன்
இல்லையின்னா இல்லையின்னேன்
ஆண் : என்னப்பா…..கணக்கு வந்ததா…..
ஆண் : சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி…
ஆண் : டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து
துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா
ஆண் : இப்ப கணக்கு வந்ததா…..
ஆண் : சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு
ஆண் : என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்
ஆண் : சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா
தண்ணி வருமான்னு கேட்டேன்
ஆண் : அடேய்…..நான் அப்பன் ஆயா சொன்னேன்டா
அப்பன் ஆயா சொன்னேன்டா
பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன்
பாத்துட்டு வந்து சொன்னேன்….
ஆண் : சாமி..
ஆண் : என்னைய நெனச்சு நீயி
பதினாறுமொழம் வெட்டப்பா
நான் தண்ணிய எடுத்து தாரேன்
தாகத்த தீர்த்து தாரேன்
உன் தாகத்த தீர்த்து தாரேன்
ஆண் : சரி சாமி இந்த வருஷம்
எப்ப மழப் பெய்யும்
காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்
ஆண் : டேய் என்னை வம்புக்கிழுக்காதடா
வம்புக்கிழுக்காதடா
வரம்பு மீறி பேசாதடா
ஆண் : நான் பல மாடும் மேய்க்கிறவன்
பல மாடும் மேய்க்கிறவன்
மலையேறி போறேன்டோ
மலையேறி போறேன்டோ
அரகரா அரகரா அரோகரா…..