பாடகிகள் : மதுமிதா, அஜித்தா
இசையமைப்பாளா் : பவன்
பெண் : உன் நினைவுகள்
எதுவோ அதுதான் உன்
உலகம் உன் கனவுகள்
எதுவோ அதுதான் உன்
இதயம்
பெண் : உன் தேடலை
நீ தேடி கொண்டே
நடந்தால் என்றாவது
உன் கையில் சேரும்
முழுதாய்
பெண் : உன் பாதையில்
நீ ஓடி கொண்டே இருந்தால்
என்றாவது அது வெற்றி
பெறும் பெரிதாய்
குழு : ………………………
பெண் : ஆண்கள் என்றால்
சில கேள்வி வரும் பெண்கள்
என்றால் பல கேள்வி வரும்
பெண் : வெற்றி எல்லாம்
பெறும் போதை தரும்
தோல்வி எல்லாம் ஒரு
கீதை ஆகும்
பெண் : வெல்லும் வரை
ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு
முன்னேறு நீ எட்டும் வரை
தூங்காமல் தேடு என்றும்
வேண்டும் உன்னோடு நீ
பெண் : நாட்டின் கண்கள்
பெண்கள் என்பாய் கண்கள்
என்று தூங்க செய்வாய்
பெண்கள் வீட்டின் தங்கம்
என்பாய் தங்கம் என்று
பூட்டி வைப்பாய்
குழு : …………………………