உலகே சமாதான ஆலயமாம்
உயிர் யாவும் ஒன்றெனும்
எண்ணமே கொண்டால் இந்த
உலகே சமாதான ஆலயமாம்......(உலகே)
கொலையேது போரேது குண்டுகள் தானேது
கூடிக் கெடுக்கும் வஞ்சக் கேடுகள் கிடையாது
தொலையாத பகையேது துன்பங்கள் வாராது
உலகே சமாதான ஆலயமாம்....
கலையோங்கும் மொழியோங்கும் காவியமோங்கும்
கைத்தொழில் மேலோங்கிச் செல்வமே தேங்கும்
தலை மீது கதிரேந்தும் நன்செய்கள் வளமோங்கி
தானியம் மிகத் தந்து பூமியில் பசி நீங்கும்
தேனூறும் மணமலர்மிகு பூஞ்சோலை தனில்
ஒயில் மயில் நின்றாடும்
தேசங்கள் இன்பங்கள் பொங்கிடும் எழிலோடு
உலகே சமாதான ஆலயமாம்....