பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : தொட்டில் கிளி தூங்கடி
சின்ன பூங்கொடி உறவே ஆராரோ
அப்பன் இங்கே யாரடி
வந்து கேளடி அழகே ஆராரோ
ஊமைக்கிளியோ ஒப்பிவிட்டது
அப்பன் கிளியோ தப்பிவிட்டது
ஹோ ஹோ……ஹோ….ஓ….
பெண் : தொட்டில் கிளி தூங்கடி
சின்ன பூங்கொடி உறவே ஆராரோ
அப்பன் இங்கே யாரடி
வந்து கேளடி அழகே ஆராரோ
பெண் : பொம்பளைங்க எல்லாம் தலையாட்டத்தான்
ஆம்பளைக்கு எல்லாம் வெளையாட்டுத்தான்
பத்து மாத சந்தையில
பாவி உன்ன வாங்கி வந்தேன்
பெண் : கற்பத்துக்கு நோகுமின்னு
பைய பைய மூச்சு விட்டேன்
தாய் மனம் தாங்கல தந்தைய காங்கல
என்ன செய்ய ஏழை……
பெண் : தொட்டில் கிளி தூங்கடி
சின்ன பூங்கொடி உறவே ஆராரோ
அப்பன் இங்கே யாரடி
வந்து கேளடி அழகே ஆராரோ
பெண் : கட்டி வச்ச தாலி அது போலியா…
பேதப் பொண்ணு நானா இது கேலியா
மானம் கெட்டு போனவரே
வந்தயில கேட்டு வச்சேன்
பெண் : ஆண்டவனும் கேக்கல
உன் காதிலேயும் போட்டு வச்சேன்
காலமே மாறுமே காயமே ஆறுமே
கண்ணீர் என்ன மானே….
பெண் : தொட்டில் கிளி தூங்கடி
சின்ன பூங்கொடி உறவே ஆராரோ
அப்பன் இங்கே யாரடி
வந்து கேளடி அழகே ஆராரோ
ஊமைக்கிளியோ ஒப்பிவிட்டது
அப்பன் கிளியோ தப்பிவிட்டது
ஹோ ஹோ……ஹோ….ஓ….
பெண் : தொட்டில் கிளி தூங்கடி
சின்ன பூங்கொடி உறவே ஆராரோ
அப்பன் இங்கே யாரடி
வந்து கேளடி அழகே ஆராரோ