பாடகர்கள் : ஜானகி ஐய்யர் மற்றும் அஜீஷ்
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
ஆண் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ
ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
ஆண் : நீ முதல் நான் வரை
யாவுமே மயக்கம்
பெண் : நீரிலே மூழ்கிடும்
வேதனை எனக்கும்
ஆண் : கடல் சேரும் நதியினிலே
கரை சேரும் படகு இது
பெண் : அதில் நீயும் நானும்
சேர்ந்து மிதப்போம்
ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ
ஆண் : மாலையில் ராவினில்
போர்வையில் இணைய
பெண் : காலையில் உன் நெஞ்சில்
தூக்கங்கள் களைய
ஆண் : தனியாக ஒரு உலகம்
பரிமாற இரு இதயம்
பெண் : இது போதும் மட்டும்
காதல் வளர்ப்போம்
ஆண் : கால்கள் தேடும் பாதை நீ
பாதம் தேடும் ஊரும் நீ
பெண் : ஓடை தேடும் தாகம் நீ
தாகம் தேடும் கோடை நீ
ஆண் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ