பாடகர்கள் : மனோ, எஸ். என் சுரேந்தர்,
தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : தெரியாமல் மாட்டிக் கொண்ட
கணவர்களே
குழு : அடடட தெரியாமல் மாட்டிக் கொண்ட
கணவர்களே
ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே
தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே
ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே
தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே
ஆ…..ஆ…ஆ…..ஓய்….
குழு : தினம் தினமும் போராடி பரிதவிப்பாய்
கொண்ட மனைவியரின் புடவைகளை நீ துவைப்பாய்
கறிகாய்கள் வாங்கி வந்து சமைத்திருப்பாய்
அவள் வரும் போது பாய் எடுத்து நீ விரிப்பாய்
அடித்தாலும் பொறுத்து அசடாட்டம் சிரித்து
இடி தாங்கும் அங்கி என நிமிர்ந்து நிற்பாய்
மனைவிக்கு சரண்டர் மாவாட்டும் கிரைண்டர்
அவர் போன பின்னாலும் குனிந்து நிற்பாய்
குழு : புருஷன் உழைக்கிற மாடா
இந்த பூஜை நமக்கொரு கேடா
அவள் வேஷம் கலைக்க ரோஷம் பிறக்க
எழுந்து நடந்து நிமிர்ந்து வெளி வர
குழு : தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே
ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே
தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே
ஒரு நாள் மட்டும் சுமங்கலிக்கு தெய்வங்களே
தெரியாமல் மாட்டிக் கொண்ட கணவர்களே
பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ…
குழு : ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ…
ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…ஆ…..ஆ…
ஆ……ஆ……ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…
பெண் : கல்லாக இருந்தாலும் கணவன் என்று
தினம் ஃபுல்லாக வந்தாலும் புருஷன் என்று
எல்லாமும் அன்றாடம் பொறுத்து நின்று
தொல்லை தாங்காமல் சில நேரம் வெறுத்ததுண்டு
பீச் என்று உண்டா பார்க் என்று உண்டா
ஆனாலும் முகம் தன்னை சுளித்ததுண்டா
இல்லாமல் இருந்தும் விருந்தாளி வந்தால்
சமாளிக்கத் தெரியாமல் விழித்ததுண்டா
தாய்க்குப் பின்னாலே தாரம்
உம்மை காப்பது சுமங்கலி தாரம்
உங்கள் ஆயுள் நிலைக்க வாழ்வும் தழைக்க
நோன்பு இருக்கும் குடும்பப் பெண்களை
பெண் : புரியாமல் பேசுகின்ற கணவர்களே
இது உமக்காக நடத்துகின்ற பூஜைகளே
புரியாமல் பேசுகின்ற கணவர்களே
இது உமக்காக நடத்துகின்ற பூஜைகளே
பெண் : புரியாமல் பேசுகின்ற கணவர்களே
ஏ…….ஏ…..ஏ…