பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தாண்டவம் போதுமைய்யே
தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
ஆண் : வீணையில் சாம வேதம் ஓதிய
வேந்தன் அழும்போது
வீணையில் சாம வேதம் ஓதிய
வேந்தன் அழும்போது
ஆண் : நெற்றி வெந்நீர் அணிந்தவன்
கண்ணீர் வடித்தும் வாசல் வரும்போது
ஆண் : தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும்
காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும்
செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும்
காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும்
ஆண் : தெருக்காட்டில் போராடி சாய்ந்ததேன்
என்றும் சாயாத குன்றங்கள் நிலை சாய்ந்ததேன்
இவை வினை என்பதா இல்லை விதி என்பதா
நித்தம் சதிராடும் சிவனே உன் செயல் என்பதா
ஆண் : தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே
ஆண் : நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன்
அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன்
நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன்
அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன்
ஆண் : குற்றங்கள் வேறென்ன நான் செய்தது
எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது
குற்றங்கள் வேறென்ன நான் செய்தது
எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது
நான் தனியாவதா நெஞ்சம் தணலாவதா
என்றும் கலங்காத இலங்கேசன் அலை பாய்வதா
ஆண் : தாண்டவம் போதுமைய்யே
கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே
திருத்தாண்டவம் போதுமய்யே….