பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
மானே எனக்குப் புரியாதா
மகன் வரப்போவது தெரியாதா
மானே எனக்குப் புரியாதா
மகன் வரப்போவது தெரியாதா
ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
ஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே
கால்கள் உதைத்திடும் நாதம்
ஆண் : காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே
கால்கள் உதைத்திடும் நாதம்
ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்
உதைக்கும் என்பதே வேதம்
ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம்
உதைக்கும் என்பதே வேதம்
பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்
காரணம் நான்கு மாதம்
பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன்
காரணம் நான்கு மாதம்
காதலோ ஆசை தாய்மையே பூஜை
ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
ஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது
சிறிய பங்குதான் கண்ணே
ஆண் : பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது
சிறிய பங்குதான் கண்ணே
பத்தியத்திலும் சத்தியத்திலும்
தாய்மை காப்பவள் பெண்ணே
பத்தியத்திலும் சத்தியத்திலும்
தாய்மை காப்பவள் பெண்ணே
தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி
அவை காக்க வேண்டும் என் கண்ணை
தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி
அவை காக்க வேண்டும் என் கண்ணை
தந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்
ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
மானே எனக்குப் புரியாதா
மகன் வரப்போவது தெரியாதா
ஆண் : தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்