பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
ஆண் : ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே
ஆண் : ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே
ஆண் : மேடைப் பேச்சைக்
கேட்டுக் கேட்டு
கையைத் தட்டி நின்ற காலம்
போகட்டும் போகட்டும்
காசை வாங்கி ஓட்டுப் போட்டு
கையக் கட்டும் காலம்
போதுமே போதுமே
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
குழு : ………………..
ஆண் : நடிகர் நடிகையை
தெய்வமாக்கியே பல்லக்கிலே
தூக்கி போற தம்பியே
ஆண் : போலி தலைவர்கள்
காட்டும் பாதையை
நம்பிக் கெட்டுப் போனாய்
நெஞ்சம் வெம்பியே வெம்பியே
ஆண் : வெண்ணை வழியும்
கோடம்பாக்கம் அண்ணன் இலையிலே
எண்ணையும் இல்லே
ஆதம்பாக்கம் தம்பி தலையிலே
ஆண் : தமிழர்கள் என
ஒரு இனம் உண்டாம்
தனிப்பட அவர்க்கொரு
குணம் உண்டாம்
ஆண் : கவிதை இனிக்குது
உண்மை உதைக்குது
தமிழன் வாழ்கவே
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
குழு : ………….
ஆண் : தமிழன் குழந்தைகள்
தாயை தந்தையை
மம்மி என்றும் டாடி என்றும்
சொல்லுதே சொல்லுதே
ஆண் : தமிழன் வீட்டிலே டிவி காட்சியில்
நானும் நீயும் பேசும் மொழி
இல்லையே இல்லையே
கை வளையல் காதில் மாட்டும்
காலம் ஆனதே
ஆண் : தாவணிகள் சல்வார்
கமீஸ் ஆகிப் போனதே
ஆண் : தறிக்கெட்டுப் போனது சரி தானா
தலைமுறை இடைவெளி இதுதானா
தமிழை தமிழனே பேசக் கூசுறான்
தமிழ்த் தாய் வாழ்கவே
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே
ஆண் : ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே
ஆண் : ஏய்ச்சிப் பிழைப்பவனும்
தமிழ் மகனே
ஏமாந்து போறவனும்
தமிழ் மகனே
ஆண் : மேடைப் பேச்சைக்
கேட்டுக் கேட்டு
கையைத் தட்டி நின்ற காலம்
போகட்டும் போகட்டும்
காசை வாங்கி ஓட்டுப் போட்டு
கையக் கட்டும் காலம்
போதுமே போதுமே
ஆண் : தமிழ் மகனே தமிழ் மகனே
ஏன் பிறந்தாய் தமிழ் மகனே