பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்
பெண் : கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
ஒரு காதல் நெருப்பு ஹோய்
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே ஹே
பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..
ஆண் : பூவான மேனி….
பெண் : ம்ஹூம்
ஆண் : நானிப்போ தேனீ….
பெண் : ம்ஹூம்
ஆண் : தேனுண்ண நானும் வரலாமா…ஆஹ ஹா
பெண் : நீ போடு தாலி…..
ஆண் : ம்ஹூம்
பெண் : கிடையாது வேலி….
ஆண் : ஆஹா….
பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா….
ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது …..ஹா..
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
பெண் : ஹேய் நான் கூட மாமா
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே
ஆண் : ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள
மனசு சும்மாவும் இருக்காதே..
பெண் : கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு
ஏதேதோ போலாச்சு..
பெண் : ஆளான நானு….
ஆண் : ம்ஹூம்
பெண் : அழகான மானு….
ஆண் : ஆஹாஹ்
பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே…
ஆண் : அதுக்காகத்தானே….
பெண் : ஓஹோ
ஆண் : உன் மாமன் நானே….
பெண் : ஓஹோ
ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே…
பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
அது தானே பெண்ணோட இள மேனி…
ஆண் : ஹே ஊர்கோலம் போகும் நாள
பாத்து காத்து நின்னேனே
பெண் : கண்ணா கண்ணா
அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
அட உன்னாலத்தான்
என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு
நான் கற்பூரந்தான் என் முன்னால தான்
ஒரு காதல் நெருப்பு….ஹோய்
ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
கண்ணால இழுக்காதே
அடி யம்மா யம்மா இந்த காள மனசு
சும்மாவும் இருக்காதே…..