பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
ஆண் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
பெண் : ஹரிஹர புத்திர அவதாரமே
அதிகாலை கேட்கின்ற பூபாளமே
ஆண் : அணுவுக்குள் அணுவான ஆதாரமே
அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே…..
பெண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது…..
பெண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
ஆண் : வேதத்தின் விதையாக விழுந்தவனே
வீரத்தின் கணையாகப் பிறந்தவனே
பெண் : பேதத்தைப் போராடி அழித்தவனே
பேதத்தைப் போராடி அழித்தவனே
ஞான வேதாந்தப் பொருளாகத் திகழ்பவனே…..
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
ஆண் : வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்
போர்க்களம் புகுந்தவனே
ஆண் : சொல்லி முடித்திடும் முன் வரும்
பகையைக் கிள்ளி எறிந்தவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனே….யே…..
உன் புகழை…….
ஆண் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது
இருவர் : சொன்னால் இனிக்குது சுகமாயிருக்குது
பொன்னாய் மணியாய் உன் முகம் ஜொலிக்குது