பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஓ ஓ ஹோ
ஹா….ஆஆ….ஆஅ…..ஆஅ…..
பெண் : ஹஹஹஹா
ஆண் : ஸ ரி ஸ நி ஸ ரி க ம ப த நி ஸ
பெண் : ஹஹஹஹா
ஆண் : நி நி த நி த ப ம நி ப த நி
பெண் : ஹஹஹஹா
ஆண் : மா க ச க த ம க ஸ
பெண் : ஹஹஹஹா
ஆண் : ப த ஸ த ஸ க ஸ க ப க ப த ப த ஸ
பெண் : ஹஹஹஹா
ஆண் : சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூ வண்ணமே
பெண் : ஹஹஹஹா
ஆண் : ப த ஸ த ஸ க ஸ க ப த ப க ஸ
பெண் : ஹஹஹஹா
ஆண் : நி நி ரி ரி த த ப ப ம ம க க ரி ஸ ரி
பெண் : சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
ஆண் : மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
நீ விடியும் காலை வெள்ளி
புது விவரம் சொல்லும் பள்ளி
பெண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : கண்ணே பூ வண்ணமே
இருவர் : எல்லாம் உன் எண்ணமே
பெண் : நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ
உன்னை கண்ணாகக் கொண்டு
பெண் : நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும் இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஹோ ஓ
உன்னை கண்ணாகக் கொண்டு
ஆண் : தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
பெண் : நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
எங்கும் உன் வண்ணமே
இருவர் : எல்லாம் உன் எண்ணமே
இருவர் : சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
ஆண் : என் கண்ணே பூ வண்ணமே