பாடகிகள் : ஸ்ரீ பிரியா, சுஜாதா
பாடகர்கள் : கார்த்திக் ராஜா, கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
பெண் : வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
ஆண் : சோ சோ
ஆலோலம் பாடவா
ஆண் & பெண் : மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
ஆண் : நீ தான் தென்
பொதிகையில் எழும்
காற்று உன் மணி விழி
மின்னல் கீற்று என் மன
வயல் வந்த நாற்று
பெண் : ஊரார் கை
தொழுகின்ற சிவலிங்கம்
நீ அவன் பெற்ற இளஞ்சிங்கம்
உன் தல தல உடல் தங்கம்
ஆண் : நாணத்தை விடை
தந்து மெல்ல வெளியேற்று
பெண் : நடத்து இரவினில்
அந்த விளையாட்டு
ஆண் : பகலே இரவென
நினைத்தால் தவறா
பெண் : அது தான் ஆகாது
ஹோ ஹோஹோ
பெண் : சரவண பவ
குக வடிவழகா
குழு : சரவண சரவண
சரவண சரவண
பெண் : தினம் தினம்
கனவினில் வரும்
முருகா
குழு : சரவண சரவண
சரவண சரவண
ஆண் : காலில் பொற்
சலங்கையின் ஒளி கேட்கும்
செந்தமிழிசை அது வார்க்கும்
உன் திரு நடம் என்னை ஈர்க்கும்
பெண் : வேலா உன் அபிநயம்
என்னை வாட்டும் நற்கலைநயம்
அது காட்டும் என் நரம்பினை
அது மீட்டும்
ஆண் : நாள் எல்லாம்
நடக்கட்டும் இங்கு
தை பூசம்
பெண் : நலமாய் வளரட்டும்
இந்த உயிர் நேசம்
பெண் : இனிமேல்
தலைவனின் நிழல்
தான் தலைவி பிரிவே
கிடையாது ஹோ ஆஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
பெண் : வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
ஆண் : சோ சோ
ஆலோலம் பாடவா
ஆண் & பெண் : மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ
ஆண் : இணைந்தது இணைந்தது
இரு முகம் தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம் தான்
ஹா ஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும்
முருகா ….