பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன்
ஆண் : சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ
ஆண் : சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ
ஆண் : கண்ணாடி வீட்டுக்குள்ள
வந்து கல்லாட்டம் விழுந்தது
சாமி சிலையா
கல்லாட்டம் இருப்பது
அந்த சாமி பெற்ற வரமா
ஆண் : மண் மேல பறக்கையில்
அந்த வண்ணத்து பூச்சிக்கு
இறகு சுமையா
கண்ணீரில் குளித்திடும்
உன் கண்ணுக்குள் நான் இமையா
ஆண் : பெண்ணே ஓஹ் ஓஹ்
ஆண் : காற்றெல்லாம் அலைந்திடும் இறகே
உன்னை ஏந்த என் கைகள் வரும்
ஆண் : தூளியிட்ட தாயும் அங்கு
தூரத்தில் வாடினாள்
ஊமையான வீணை இங்கு
ராகத்தை தேடினாள்
ஆண் : நிலவு தேயும் மண்ணில் விழாதே
நிழலை தேடி தூரம் செல்லாதே
வாகை சூட வாழ்க்கை இல்லை
வாழ்ந்தால் போதும் இன்பம் கோடியே
ஆண் : சகியே சிறு பூவின் மேலே
தீயின் துகளோ
உடைந்து போகும் நீயும்
வண்ணம் இழந்த வானவில் நகலோ