பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா
ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா
பெண் : ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம்
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா…
பெண் : இது தானா அடங்காது வந்து
நீதான் தழுவாது ராசா
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா…
பெண் : மேடை கட்டி காத்திருக்கேன்
மேனியெல்லாம் பூத்திருக்கேன்
ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே
ஆண் : தாலி ஒண்ணு கட்டிவிட
தாமரைய தொட்டு விட
வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும்
பெண் : சாக்கு சொன்னாக்க போதுமா
ஏக்கம் தன்னால போகுமா
ஆண் : ஒரு காலம் வர வேணும்
மணமாலை விழ வேணும் மானே
பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..
ஆண் : ம்ம்ம்
ஆண் : மூடி வச்ச ஆசையெல்லாம்
சொல்லிக் கிட்டு போகுதடி
பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி
பெண் : ஆங்…மாமன் மகள் செங்கரும்பு
மாமன் இப்போ கட்டெறும்பு
மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு
ஆண் : எனக்கும் ஏதோ போல் ஆனது
கணக்கும் நேராக தோணுது
பெண் : என் மாமன் ஒண்ணு கேட்டா
கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா
பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..
பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா..
பெண் : இது தானா அடங்காது வந்து
நீதான் தழுவாது மாமா
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா