பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : நான் இட்டு கட்டி பாடுவதில்
இன்னுமொரு கம்பனடா
துட்டெடுத்து நீ கொடுத்தா
மெட்டெடுக்கும் கொம்பனடா
மதுரை தமிழ் எடுத்து மச்சான் நான் பாடுறப்போ
குதிரை குட்டிப் போடும் காட்டானை முட்டி போடும்
காராம் பசுவெல்லாம் தானா பால் சொரக்கும்
தரையெல்லாம் தமிழ் மணக்கும்..ஆஆஆஆஆ….
தமிழ் மணக்கும்…….ஹஹஹ்ஹ….
ஆண் : ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீயொருத்தி உங்கூட
ஆட வேணும் பாட வேணும் மால நான் மாத்தி
ஆண் : ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீயொருத்தி உங்கூட
ஆட வேணும் பாட வேணும் மால நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
ஆண் : பொன் வயல் புது நாத்து உன்மேனி
சந்தனப் பூங்காத்து
கண்களில் ஒரு பாட்டு நீ பாடி
காதல் கொடியேத்து
ஆண் : அம்மன் கோயில் தேரு கால்கள் கொண்டு ஆடுதோ
தென்ன இளநீர சேலக் கொண்டு மூடுதோ
பாய் தான் போட வாய் வெடிச்ச பூ தான் வாட
ஹாஹாஹாஹா
வாம்மா கூட பாட்டெடுத்து நான் தான் பாட
பாக்க ஒரு மோகந்தான் தாகந்தான் தானா உண்டாச்சு
ஆண் : ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீயொருத்தி உங்கூட
ஆட வேணும் பாட வேணும் மால நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
ஆண் : நல்லதோர் நாள் பார்த்து என் வீட்டில்
வந்து நீ விளக்கேத்து
நெத்திலி மீன் சோறு நீ ஆக்கி
நித்தமும் பரிமாறு
ஆண் : வண்ணப்பிள்ள போல வாய நானும் காட்டணும்
பெத்த தாயப் போல நீயும் வந்து ஊட்டணும்
கட்டில் மேலே ஹோய் பூ விரிச்ச மெத்தப்போட்டு
கொண்டச் சேவல் கூவும் வர காதல் பாட்டு
பாட ஒரு மோகந்தான் தாகந்தான் தானா உண்டாச்சு
ஆண் : ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீயொருத்தி உங்கூட
ஆட வேணும் பாட வேணும் மால நான் மாத்தி
ராசாத்தி ஹாஹன் போவாதே ம்ம்ஹூம்
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
தன்னானே தரனானா தன்னானே தரனானா