பாடகர்கள் : ஹரிசரண், உதித் நாராயண்
இசையமைப்பாளர் : எஸ். தாமன்
ஆண் : தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
ஆண் : துணையா
தான் நெஞ்சுக்குள்ள
உடனே தான் உன்ன
புடிச்சு கண்ணால
பூட்டிகிட்டேனே
ஆண் : ராஜா ராஜா நான்
தானே மகா ராணி ராணி
நீ தானே பூமி ஈர்ப்பு இல்லை
என்று பட்டம் போலே ஏற்றி
விட்டாய் ஆறு லிட்டர் ரத்தம்
உள்ள பொம்மையாக
மாத்தினாய்
ஆண் : மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே
ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே
ஆண் : தனியா தான்
வந்தேன் புள்ள தனியா
தான் போவேன் நெனச்சேன்
உன்னால மாட்டிகிட்டேனே
ஆண் : விடிந்ததும் நீ
வரும் வழியினில் நான்
ஒரு மரமென மாறியே
தவமிருப்பேன் தொலைவினில்
நீ வரும் கொலுசொலி கேட்டதும்
கிளைகளை நீட்டியே நிழல்
விரிப்பேன்
ஆண் : சேர்ந்து செல்லுகின்ற
பயணம் எல்லாம் வைரம் ஆச்சே
தோழன் தோழி இல்லை அதுக்கும்
மேலே நெருக்கமாச்சே மாயமான
மழைகாலம் உன்னை என்னை
ஒன்றாக சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை படம்
ஆக்குவேனே
ஆண் : மாயமான மழைகாலம்
உன்னை என்னை ஒன்றாக
சேர்த்தது இந்த நாளை
நெஞ்சுக்குள்ளே புகை
படம் ஆக்குவேனே
ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே
ஆண் : கதைகளை
பேசயில் கடை தெரு
போகையில் தனி ஒரு
போதையில் மிதக்கிறேனே
எனக்கென்ன நீயுமே ஒரு
பொருள் வாங்கினால் மிக
பெரும் கூச்சலில்
குதிக்கிறேனே
ஆண் : உன்னை பேச
விட்டு மௌனம் ஆகும்
எந்தன் சொற்கள் உன்னை
போக விட்டு தொடரும்
பின்னே கால்களே
ஆண் : மாயமான
மழைகாலம் உன்னை
என்னை ஒன்றாக சேர்த்தது
இந்த நாளை நெஞ்சுக்குள்ளே
புகை படம் ஆக்குவேனே
ஆண் : 20 20 மேட்ச்சு
போலே நெஞ்சம் ஆச்சு
காதலாளே சுண்டி விட்ட
காசு போல சுத்துறேனே
பூமி மேலே