ஹரி நந்தா ஹரி நந்தா ஹரி நந்தா ஹரே ஹரே
கோகுல வானா கோமகள் ராதா
ஆயரின் வானா ஆனந்தலா லா
கோகுல மாதா கோமகள் ராதா
கோகுல மாதா கோமகள் ராதா
ராதா காதல் வராதா ராதா காதல் வராதா
நவ நீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா ராதா ராதா காதல் வராதா
செம்மாற்த மலர் சூடும் பொன் நாத சூழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல்கடல்
இடையே நீ இருக்க உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி ராதா
( ராதா காதல் வராத )
ஸ்ரீராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
மந்தார மழை மேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி
தாளாத இடை மீது தள்ளாடும் மணிச் சங்கு
ஆடாதே உன் கைவழி
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் என்னடி ராதா ராதா
என்னிடம் என்னடி ராதா
( ராதா காதல் வராத )