பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், தன்வி ஷா,
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ஹஹான்…..யெஹ்
ஆண் : Can u feel me…
குழு : Now put ur hands up high
ஆண் : Can u feel me…
குழு : Now get ready
ஆண் : To my sisterz wedding come on…
பெண் : புல் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு
கட்டிக்கொள்ளும் போதை
பெண் பார்வை வலை வீசும்
புயல் வீசும் மழை வீசும்
கடை விரித்து கண் வீசும்
நெற்றிப்பொட்டின் மத்தியிலே
சுட்டெரிக்கும் பார்வை
பெண் : மோகத்தில் கொஞ்சம்
தாகத்தில் கொஞ்சம்
இதுதானே வாழ்க்கை மொத்தம்
இது என்ன வேசம்
ஆண் : ஒரு பக்கம் எரியுதடி
மறுபக்கம் குளிருதடி
முன்ஜென்மம் தெரியுதடி
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்
பெண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஆ….ஆ…..
ஆண் : வா வா என்றது பிம்பம்
நில் நில் சொன்னது நெஞ்சம்
நீ நான் என்பது மாயை
போ போ ஓட்டிடு பேயை
பெண் : போதையில் நீ விழுந்தால்
அங்கே கூச்சங்கள் கிடையாது
ஆண் : ஆஹான்
பெண் : பள்ளத்தில் மேல் பாயும்
நதிகள் மலைமேல் ஏறாது
ஆண் : படைத்தவன் சொன்னாலும்
புலிகள் மரத்தில் வாழாது
காலம் வந்து விட்டால்
இலைகள் கிளையில் தங்காது
இருவர் : விருப்பத்தில் கொஞ்சம்
வருத்தத்தில் கொஞ்சம்
இதுதானே வாழ்க்கை மொத்தம்
இது என்ன வேசம்
ஆண் : உன்னைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன்
உனக்கு வேண்டியதை வாங்கித் தாறேன்
என் வீட்டுக்குத்தான் கூட வாடி
எங்கு போனாலும் கூட வா நீ
ஆண் : நேற்று உன்னைப் பார்க்கலையே
அட இன்னிக்கு இன்னும் தூங்கலையே
ஆண் : காலையில என்ன ஆகும்
அட கல்யாணம் யாருக்காகும்
காலையில என்ன ஆகும்
அட கல்யாணம் யாருக்காகும்
ஆண் : போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா
போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா
கெட்ட பின் மானம் ஏனம்மா
அட கட்டிலில் நியாய தர்ம மா
குழு : ………………………