பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : போட்டாலும் ஏறல ஹெ என் புத்தி மாறல
என்னான்னு தோணல என்ன சொல்ல
போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல என்ன சொல்ல
ஆண் : உன்னாலே போனேன் மோசம்
எல்லாமே வேஷம் வேஷம்
என்னாச்சு பாசம் நேசம்
சொன்னால வார்த்தையும் கூசும்
போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல ஹ என்ன சொல்ல
ஆண் : தாயோடு பாசம் என்ன அறியாம வாழ்ந்தேனே
தனிக்காட்டு ராஜா போல நான் மேலே இருந்தேனே
அன்பான பார்வையை பார்த்து அணைச்சாளே மனசோட
பெண்ணோட காதலினால ஹ நான் வந்தேன் தெருவோட
ஆண் : தாளாத துக்கத்திலே எப்போதும் தூக்கமில்ல
தாங்காம தள்ளாடி நான் இருந்த வேல
போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல என்ன சொல்ல
ஆண் : உன்னாலே போனேன் மோசம்
எல்லாமே வேஷம் வேஷம்
என்னாச்சு பாசம் நேசம்
சொன்னால வார்த்தையும் கூசும்
ஆண் : போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல ஹ
என்ன சொல்ல என்ன சொல்ல
ஆண் : தாலாட்டு பாட்டுச் சத்தம் என் காதில் கேட்டதில்லை
தாயென்ன தொட்டுத் தொட்டு பால் கூட ஊட்டவில்ல
இல்லாத சொந்தம் பந்தம் எல்லாம கொண்டு வந்தா
பொல்லாத காளை நெஞ்ச புண்ணாக ஆக்கிப்புட்டா
ஆண் : சொன்னாலும் ஆறவில்ல என் பாதை வேறயில்ல
கண்ணாடி புட்டி ஒண்ணு கை வந்த வேளை
போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல என்ன சொல்ல
ஆண் : உன்னாலே போனேன் மோசம்
எல்லாமே வேஷம் வேஷம்
என்னாச்சு பாசம் நேசம்
சொன்னால வார்த்தையும் கூசும்
ஆண் : போட்டாலும் ஏறல என் புத்தி மாறல
என்னான்னு தோணல ஹ
என்ன சொல்ல என்ன சொல்ல….