பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
பெண் : காதலென்னும் போர்க்களம்
ஆண் : கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
பெண் : போர்க்களம்…..
கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும்
பின்னுகின்ற போர்க்களம்……போர்க்களம்
ஆண் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
ஆண் : நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
நாணமென்ற குதிரை ஏறி
ஆடி வந்த பெண்மையே
பெண் : {ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே
ஆசையென்ற வில்லையேந்தி
ஓடி வந்த காளையே} (2)
ஆண் : பட்டம் பெற்ற பெண்ணென்றாலும்
பள்ளியறைப் பதுமையே
பெண் : சட்டம் கற்ற ஆணென்றாலும்
தாரத்தின் முன் அடிமையே……அடிமையே
பெண் : போர்க்களம் போர்க்களம்
ஆண் : காதலென்னும் போர்க்களம்
இருவர் : போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்