பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ
பெண் : பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ..
பெண் : இணைந்தால் போதும் விடமாட்டேன்
இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன்
பக்கம் வந்து சேரலாம்
சொர்க்கவாசல் காணலாம்….ஆஹாஹ்…
பெண் : இணைந்தால் போதும் விடமாட்டேன்
இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன்
பக்கம் வந்து சேரலாம்
சொர்க்கவாசல் காணலாம்….
பெண் : திருத்தோளில் நீ என்னை தாங்க
இந்த தேவதேவியும் ஏங்க
தொடலாம் படலாம் இளமேனி எங்கும்
மின்னல் பாயாதோ….
பெண் : பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ..
பெண் : உயிராய் வாழும் ஒரு தாரம்
எடுத்தாள் வேறு அவதாரம்
இனி காமன் லீலைதான்
மனம் காணும் வேளைதான்..ஆஹ்ஹாஹ்..
பெண் : உயிராய் வாழும் ஒரு தாரம்
எடுத்தாள் வேறு அவதாரம்
இனி காமன் லீலைதான்
மனம் காணும் வேளைதான்..
பெண் : அந்த ஆதிசேஷனின் மேலே
பள்ளிக் கொள்ளும் மாதவன் போலே
மடிமேல் துயில இளம் காளை நெஞ்சம்
காவல் மீறாதோ..
பெண் : பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ.