பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : மஞ்ச குளிச்சுது ஆகாயம்
மாப்பிள்ளை வந்தாச்சு ஆதாயம்
மாயக் கோலம் போடும் சாயங்கால நேரம்
வானத்துக்கும் பூமிக்குந்தான் கல்யாணமாம்…
ஆண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
ஆண் : ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
பெண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தேன நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
பெண் : ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
ஆண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பெண் : பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண் : ஹேய் வெள்ளிகளை அள்ளி வந்து
புள்ளி வச்சேன் வாசலிலே
வானவில்ல கொண்டு வந்து
கோலம் போடு ஆசையிலே
பெண் : ஆகாயம் பூமி சத்தியந்தான்
ஆதாரம் நீதான் மாறாதய்யா
ஏழேழு ஜென்மம் ஆனாலுந்தான்
என்னோட சொந்தம் நீதானய்யா
கள்ளூறும் தேனை அள்ளிக்கவா கிள்ளிக்கவா
ஆண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பெண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண் : ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
பெண் : ஓடோடி வந்தாளே இந்நேரமா
ஆண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பெண் : பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா….
குழு : ………………………….
பெண் : வெட்கப்பட்டு சின்னப் புள்ள
விக்கி நிக்கும் தண்ணிக்குள்ள
ஆண் : ஹேய்..ஹேய்..
பெண் : சொக்குப்பொடி போட்டுப்புட்ட
தூக்கம் வரல்ல கண்ணுக்குள்ள
ஆண் : அச்சிட்ட நேரம் ஆசப் பாரு
அம்மாடி நீதான் வண்ணத் தேரு
பக்கத்தில் வந்து தாளம் போடு
பாவாடை பாடும் ராகம் நூறு
முந்தானை வாசம் கொண்டாட வந்தேனே
பெண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஆண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பெண் : ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஆண் : ஓடோடி வந்தாளே இந்நேரமா
பெண் : பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
ஆண் : பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா.