பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ…..(3)
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே….ஏ……ஏ…..
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….
குழு : லலலல லலலல லலலல
ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா…,,,,,
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : லல்ல லலலலலா……லல்ல லலலலலா……
லலலல லலலல லலலல…….
ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….
ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே….
ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….