பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஜெனிசி
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும் ஹா ஆஆ …
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
ஆண் : சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
பெண் : மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஆண் : ஹே கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்க்கமும் போய் வருவோம்
வருவோம்………..வருவோம்………..
பெண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
ஆண் : தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
ஆண் : ஹா ..ஆ…ஹா…ஆஅ…
ஆண் : லா ..லா…லா…லா…..
பெண் : மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையை போலே இன்பம் பொங்கட்டும்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையை போலே இன்பம் பொங்கட்டும்
ஆண் : சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்த்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்த்தை தாலாட்டு
பெண் : சந்தானம் பூப்போல் சங்கதி பேச
காவியம் பல தோன்றும்
தோன்றும்………….தோன்றும்…………
ஆண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
பெண் : தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பெண் : பனியும் நானே மலரும் நீயே
பருவ ராகம் பாடுவோம்
ஆண் : …………………………….
பெண் : ……………………………..