பாடகி : மதுஸ்ரீ
பாடகர்கள் : பிரேம்ஜி, கார்த்திக் ராஜா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : பனி விழும் காலம்
பூவுக்கு பரவசம் இலையுதிர்
காலம் துளிருக்கு பரவசம்
வான் மழை வந்ததால் பூமிக்கு
பரவசம் நீ நிழல் கண்டதால்
என் முகம் பரவசம் புதிதாய்
ஆண் : உனது எனது என்ற
பேதம் அழிந்ததே எனக்குள்
நீயும் வந்து யாதுமாகிறாய்
புதிதாய்
ஆண் : புதிதாய் புதிதாய்
ஒரு மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே மனதில்
ஒரு வெளிச்சம் வருகிறதே
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே
ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே
குழு : …………………………..
ஆண் : இரண்டு மனங்கள்
இணையுது அழகாய் என்ன
நடக்குது எல்லாம் நிஜமாய்
உனது எனது என்பது பொதுவாய்
உலகம் முழுவதும் நமக்கின்று
உறவாய்
பெண் : இந்த நெருக்கம்
ஒன்று போதும் வேர் என்ன
வாழ்வில் வேண்டும் இந்த
நிமிடம் நெஞ்சின் ஓரம்
நகராமல் உறைய வேண்டும்
ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே
ஆண் : இணைந்து நடக்கும்
பாதைகள் நீளும் இறுதி
வரைக்கும் போய் வர
தோன்றும் இரண்டு
இதயங்கள் எனக்குள்
துடிக்கும் உறங்கும்
போதும் உன் குரல்
ஒலிக்கும்
பெண் : உந்தன் நிழலில்
அருகில் இருந்தால் இந்த
ஜென்மம் மோட்சம் ஆகும்
உந்தன் விழியின் வழியில்
இருந்தால் எந்தன் உடலில்
உயிரும் வாழும்
ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
பெண் : அதனால்
ஒரு நேசம் பிறக்கிறதே
ஆண் : மெதுவாய் ஒரு
வெளிச்சம் வருகிறதே
பெண் : மனதில் ஒரு
மாற்றம் நிகழ்கிறதே
பெண் & ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்
ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே