பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமோ
பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
ஆண் : மாறாத காதலுக்கு
தூது செல்லுதே பூ மேகமே
பூவான காதலிக்கு சேதி சொல்லுதே
என் மோகமே
பெண் : வா வா அன்பே தா தா என்பேன்
நீரோடைப் போல் ஓடும்
நெஞ்சோடு காதல் இராகம்
காதில் கேட்கும் கல்யாண தாளம்
ஆண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
பெண் : நீங்காமல் வாழுகின்ற காலம் எண்ணுதே
என் உள்ளமே
நெஞ்சோடு சேருகின்ற ஆசைக் கொண்டதே
பெண் உள்ளமே
ஆண் : வா வா இன்று நீ தா தா ஒன்று
எங்கெங்கும் தேவ கானம்
என்னுள்ளில் காணும் மோனம்
வாழும் காலம் உன்னோடு சேரும்
பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
ஆண் : சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமோ
பெண் : ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்……