பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : சாராய மில்லுக்கு ஜே…
சமபந்தி விருந்துக்கு ஜே….
குழு : ஜே….
பெண் : தாலிக்கும் கம்மலுக்கும் ஜே…
குழு : ஜே….
பெண் : தாய்மார்கள் பொறுமைக்கு ஜே….
குழு : ஜே….
பெண் : வணக்கம் சொல்லி ஏத்துகிட்டோம்
வகையில்லாம மாட்டிகிட்டோம்
ஆசைப்பட்டு போட்டுகிட்ட ஜே…..
பூந்து ஆட்டுதடா எல்லோரையும் ஜே…
குழு : ஜே….ஜே….ஜே….
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : மொளகா இப்போ முப்பது காசு
நீ முந்நூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு
சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு
கல்கட்டா சல்பட்டா டோய்..டோய்….டோய்..டோய்..
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி
நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி
உட்டாலங்கடி கதையெடுத்து உட்டான் கேளடி
நம்ம வட்டாரத்துக்கு தலைவருன்னு வந்தான் பாரடி
பெண் : ஆசைக் காட்டி மோசம் பண்ணி அமுத்திக்கின்னாடி
அண்டரு கிரௌண்டில பதுக்கிக்கினான்டி
ஆளை ஏய்க்கும் டாபரு அவனுக்குத்தான் ஆபரு
ஆளை மயக்குறான் மயக்குறான்
மஞ்ச நாமம் போடுறான்
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : தம்பிக்கு தண்ணி காலியாச்சு
தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு
தம்பிக்கு தண்ணி காலியாச்சு
தாளபத்திரி சத்தமெல்லாம் ஓய்ஞ்சி போச்சு
பெண் : காலி பாட்டல ஏறக் கட்டிக்க
கையில நீ புடிச்சிக்கின்னு ஓரம் கட்டிக்க
சின்னப் பையன் குடிக்கிறான்
சீலக் கடிச்சி ஓடைக்கிறான்
மூச்ச புடிச்சிகின்னு முழுசாவே குடிக்கிறான்….
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க
பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க
போட்டவங்க எஞ்சரத்த நெனப்பாங்க
பொழுதுக்கெல்லாம் இங்கேயே கெடப்பாங்க
பெண் : நீ நின்னு நிறுத்தி நேரா ஆடு
நெருங்கி குத்து டப்பாங்குத்து
ஒண்ணாக சேர்ந்து ஆடு
உக்கார்ந்தது கொஞ்சம் ஆடு
சில்லுன்னு போட்டதுதான்
சல்லுன்னு ஏறிகிச்சு
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : மொளகா இப்போ முப்பது காசு
நீ முன்னூறு போட்டுக்கிட்டு மேடையில் பேசு
சீலடிச்ச பாட்டலுக்குள் சீக்கிரட்டா பூந்துகிச்சு
கல்கட்டா சல்பட்டா டோய்..டோய்….டோய்..டோய்..
பெண் : பச்சமொளகா விலை ஏறிப்போச்சு
அது பஜ்ஜியா உருவம் மாறிப் போச்சு
பெண் : …………………………..