பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பெண் : பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பெண் : அணைக்கும் பழக்கம்
கொடுக்கும் மயக்கம்
அணைக்கும் பழக்கம்
கொடுக்கும் மயக்கம்
ஆண் பெண்ணிடம் தந்ததோ கண்டதோ
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
யார் யாரிடம் கண்டதோ தந்ததோ
பெண் : பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பெண் : பொன்னைத் தட்டி போட்டுக் கொண்டால்
நெஞ்சில் மட்டும் மின்னலாம்….
என்னை கட்டிப் போட்டுக் கொண்டால்
மஞ்சம் தொட்டுக் கொஞ்சலாம்
கொஞ்சலாம் கொஞ்சலாம்
கசப்பும் இனிப்பும் மனத்தின் நினைப்பும்
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது
பெண் : பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பெண் : எந்தப் பெண்ணை சொந்தம் என்று
உந்தன் கண்கள் சொல்லுமோ
எந்தப் பெண்ணை சொந்தம் என்று
உந்தன் கண்கள் சொல்லுமோ
பெண் : அந்த பெண்ணை முன்னே வைத்தால்
நெஞ்சம் எங்கே செல்லுமோ செல்லுமோ
ஜொலிக்கும் விளக்கில் இருக்கும் நெருப்பு
பாதையும் காட்டலாம்
தீயையும் மூட்டலாம்
பெண் : பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ